யாழ் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் 15 ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி கடந்த 23ம் திகதி நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமானது.
அதற்கமைய திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களில் 68 வீதமானவை தற்போது நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் 7ம் கட்டமே யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் இறுதிநாள் நிகழ்வுகள் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ அரச செய்தி திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க