உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பரகம்மல வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் தொடர்பில் விசாரணை

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகம்மல வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மூன்று கிளைமோர் குண்டுகளும், சிறிய கண்ணிவெடியொன்றும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க