சினிமா

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால்!

நடிகர் விஷால், படம் தயாரிப்பதற்கென ‘பிலிம் பேக்டரி’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தியிருந்தால். அதில், முறையாக வருமான வரித் துறைக்குச் செலுத்தவில்லை. இதையடுத்து, உரிய விளக்கம் அளிக்கவும், பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியைச் செலுத்துமாறும், நடிகர் விஷாலுக்கு தொடர்ந்து , வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அந்த நோட்டீஸுக்கு, நடிகர் விஷால் எந்த விளக்கமும் அளிக்காததால், அவர் மீது நடிவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கேட்டு, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டும் நடிகர் விஷாலுக்கு தொடர்ந்து உத்தரவிட்டது. ஆனால், நடிகர் விஷால் ஆஜராகவே இல்லை.

இதையடுத்து, கடந்த 2ம் திகதி அவரை கட்டாயம் ஆஜராகுமாறு  உத்தரவிட்டனர். ஆனால், அந்த நாளிலும் அவர் ஆஜராகாததால், அவருக்கு பிடிவிராந்து  உத்தரவு பிறப்பித்த நீதிமின்றம், அவரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அதையடுத்து, நேற்றைய தினம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் நடிகர் விஷால். அதனையடுத்து , அவருக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிராந்து உத்தரவு விலக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க