மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் இந்துக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இஸ்லாமிய பயங்கரவாதியின் உடற்பாகங்களை இரவோடு இரவாக இரவோடிரவாக புதைத்தமையானது கடும் கண்டனத்திற்குறியது.
பல நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்த ஒரு பயங்கரவாதியின் உடல் பாகங்களை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள எந்தவொரு முஸ்லிம் மையவாடியிலும் அடக்கம் செய்வதற்கு காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபையினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
சூழ்நிலையில் அந்த மனித அங்கங்களை மட்டக்களப்பில் ஏதாவதொரு மயானத்தில் புதைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த வேளையில் அதற்கு இரண்டு முறை மக்கள் ஆர்பாட்டம் நடத்தி தமது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
என இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.அருண்காந் புதன்கிழமை (28) வெளியிட்டுள்ள அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதுதவது….
அத்தோடு மட்டக்களப்பு பொலிஸ் பிரதி அத்தியட்சகர் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியிருந்த நிலையில் பயங்கரவாதியிடம் உடல் பாகங்கள் கள்ளிக்காட்டு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளமை இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவை தவிர இம்மயானம் முழுமையாக மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள போதும் மாநகர ஆணையாளர் மேயர் ஆகியோர் தமக்கு ஒன்றுமே தெரியாது என்று நழுவியுள்ள நிலையில் அப்பாவி பொதுமக்களும் இளைஞர்களும் யுவதிகளும் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளமை வேதனையளிக்கின்றது.
ப்பதாகவுள்ளதுடன், இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மிகக் கூடிய அக்கறை செலுத்தி பயங்கரவாதியின் உடல் பாகங்களை வேறு பகுதிக்கு கொண்டுசென்று அவற்றை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எமது கட்சியின் சார்பில் வேண்டுகின்றோம்.
இன்றேல் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்து மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது.
இனங்களுக்கிடையே பாரிய விரிசல் ஏற்படுவதோடு சமூக அமைதிக்கு பெரும் குந்தகம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இது தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை இலங்கை தேசிய ஜனநாயக கட்சி வேண்டுகின்றது. என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க