உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சீனாவின் நிதி உதவியுடன் 2,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டம்

சீனாவின் நிதியுதவியுடன் 2,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மொரட்டுவ, பேலியகொட, திம்பிரிகஸ்ஸாய, மாரகம ஆகிய இடங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியின் கீழ் 2,000 வீடுகளை நிர்மாணித்தல் 

குறைந்த வருமானத்தைக் கொண்ட நபர்களுக்காக சீனா நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதியுதவிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

இதற்காக மொரட்டுவ, பேலியகொட, திம்பிரிகஸ்ஸாய, மாரகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் பேலியகொட மற்றும் மாரகம மாநகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள காணியில் நிர்மாணப் பணிகளுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய திம்பிரிகசாய பிரதேச செயலாளர் பிரிவில் தெமட்டகொட கலாநிதி டெனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள 1 ரூட் 03.77 பேர்சைக் கொண்ட எழுமடுவ வத்தை என்று அடையாளப்படுத்தப்படும் அரசாங்கத்தின் காணி அரச காணி கட்டளைச்சட்டத்தின் கீழ் நன்கொடையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மொரட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் பெட்டரிவத்தை தெலவல மாவத்தையில் உள்ள 3 ஏக்கர் 3 ரூட் 08.84 பேர்ச் காணியை பெற்றுக் கொள்வதற்கும் இந்த காணி அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காகவும் மாநகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

[ அரச செய்தி திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க