ஹொங்கொங் போராட்டத்தில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ‘இழப்பதற்கு எதுவுமில்லை’, உள்ளிட்ட கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்பொழுது சட்ட திருத்தம் நிறுத்தி வைக்கபப்ட்டுள்ள நிலையில் முழுமையாக ரத்து செய்ய கோரி வருகின்றனர்.
ஆனால் ஆகஸ்ட் 24-ம் திகதி , நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மாபெரும் வன்முறை வெடித்தது, பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ‘இழப்பதற்கு எதுவுமில்லை’,நாங்கள் எரிந்தால் நீங்களும் எரிவீர்கள்’ மற்றும் ‘ஹொங்கொங் சீனா இல்லை’ என தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க