மலையகத்தில் கடந்த 75 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்காது தோட்டத்தொழிலாளர் விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டுள்ளது .
இனி வரும் காலங்களிலும் அவ்வாறே செயல்படும் இவ்வாறு இ.தொ.கா. மஸ்கெலிய பணி மனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா வின் நிலைப்பாடு குறித்து மக்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் மலையக மக்களுக்கு உண்மையான சேவை செய்ய யார் வருவார்களோ அவர்களுக்கே எமது ஆதரவு யாரை ஆதரிப்பது என்று இன்னும் நாம் தீர்க்கமான முடிவை முன்வைக்கவில்லை.
இன்னும் சில தினங்களில் கட்சியின் தலைமை பீடம் இதுகுறித்து தீர்மானிக்கும்.
இன்று தோட்ட பகுதிகளில் பொய் வாக்குறுதிகளை வழங்கி கொண்டு புதுபுதுப்புது தொழிற்ச்சங்கங்கள் வலம் வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.
இது எமது மக்களை திசை திருப்பி வாக்கு சேகரிப்பதற்காக மட்டுமே இதற்கு எமது மக்கள் ஒருபோதும் துணை போககூடாது என்றார் .
இந்த கலந்துரையாடலில் ஜீவன் தொண்டமான் உட்பட முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ் தோட்டகமிட்டி தலைவர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் .
கருத்து தெரிவிக்க