இளநீர் இயற்கையாக கிடைக்கும் அருமையான பானம். இதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இளநீரில் கொழுப்பு குறைவாக இருக்கும். இதனை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
இளநீரில் எலக்ட்ரோலைட் அதிகளவு உள்ளதால் விளையாட்டு வீரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவுகிறது.
இதில் குறிப்பிட்ட அளவு புரதச்சத்து இருப்பதால் ஒவ்வொரு நாளும் இளநீரை நாம் அருந்தும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படும்.
கோடை காலங்களில் நமது உடலில் உள்ள நீர் வற்றிப் போகும் வாய்ப்புகள் உள்ளது. இதன்போது உடல் பலவீனமாக காணப்படும். இளநீரை அடிக்கடி குடித்து வந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.
இளநீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
குடல் புழுக்கள் உள்ள குழந்தைகளுக்கு இளநீர் நல்ல பானம்.
இளநீரில் உள்ள பொட்டாசியம், இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவை சமப்படுத்துவதால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உகந்தது.
கருத்து தெரிவிக்க