ஐக்கிய தேசியக்கட்சி ஒழுக்காற்று விசாரணைக்கு அழைக்கும் வகையில் ராஜாங்க அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தவறு செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒழுக்காற்று விசாரணை என்பது புதிய அம்சம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் விசாரணையின்போது தெரிவிக்கப்படும் விளக்கங்களின் பின்னர் அந்த விடயம் முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று கோருவதற்காக இந்த ராஜாங்க அமைச்சர்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படுமானால், சஜித்தை கோரும் ஏனையோர் மீதும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க