இலங்கையின் இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு ஒன்று கண்டித்துள்ளது.
அத்துடன் படைத்தரப்பு மேற்கொண்ட தவறுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் படைப்பிரிவுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அந்தக்குழு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.
சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களுக்கு பதவியின் அடிப்படையில் விலக்களிக்கப்படுகிறது.
அதேநேரம் அரசாங்க நிறுவனங்கள் மீது இலங்கை சமூகத்தின் நம்பிக்கையை இழக்கச்செய்வதுடன் நிரந்தரமில்லாத தன்மையை தொடரச்செய்யும் என்றும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சவேந்திர சில்வாவை ஐக்கிய நாடுகளின் விசேட ஆலோசனைக்குழு உறுப்பு நிலையில் இருந்து நீக்கியது. எனினும் அவர் தலைமை வகித்த 58வது படைப்பிரிவின் மீது உரிய விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில் இலங்கையில் வன்முறைகள் மீண்டும் எழாதவகையில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் நிபுணர் குழு கோரியுள்ளது.
இந்த நிபுணர் குழுவில், உண்மை மற்றும் நீதிக்கான நிபுணர் பாபிலன் சல்வியலி, தலைவர் பேனாட் டஹாமி, உதவி தலைவர் டே உங் பெய்க் உட்பட்ட பலர் அடங்குகின்றனர்.
கருத்து தெரிவிக்க