ஐந்து நாட்களில் சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் 473 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்க 1913 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இதற்கு கிடைக்கப்பெற்ற 473 முறைப்பாடுகளில் அதிகளவானவை கேகாலை மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதாக பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிறி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க