உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி ஆதரவு கோத்தபாயாவுக்கு – டக்ளஸ்

கோத்தபாயின் ஆட்சி மலர்ந்து ஆதிகாரத்திற்கு வந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைகன்க்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் விரைவாக அதுவும் ஆறுமாதகாலத்திற்குள் தீர்வைக் காண முடியும்.

ஏனெனில் நாம் முன்வைத்துள்ள 13 ஆவது திருத்த்தை அமுல்ப்படுத்தி அதற்கு அப்பால் செல்வது என்ற நடைமுறைச்சாத்தியமான தீர்வும் அதனை அடைவதற்கான வழிமுறைகளும் தங்களிடம் இருக்கின்றதாக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைக்கு இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட ஏனைய பிரச்சனைகளுக்கான தீர்வை ஏற்படுத்துவது அவர்களது நோக்கமல்ல.

மாறாக அவற்றைத் தீராப் பிரச்சனைகளாக வைத்திருப்பதே அவர்களது ஒரே நோக்கமர்கும். ஊண்மையில் இனப்பிரச்சனைக்கான தீர:வும் அதனை அடைவதற்கான அவர்களது வேலைத் திட்டம் தான் என்ன.

ஆகவே இவை தொடர்பில் பொது வெளியில் மேடையில் சவாலுக்கு உட்படுத்த நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என அக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

நடைபெறவிருக்கும் ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஏன் ஆதரிக்க வேண்டுமென்ற நிலையில் எமது கட்சி ஒரு முடிவை எடுத்துள்ளது.

அந்த முடிவின் பிரகாரம் பொதுஐன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஐபக்சவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

அவர்களால் தான் எமது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை காண முடியுமென்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையில் மூன்று பிரதான கட்சிகள் தற்பொது தெற்கில் உள்ளன.

அதில் தென்னிலங்கை நிலவரப்படி பொதுஐன பெரமுன தான் முண்ணணி என ஆரூடம் கூறப்படுகிறது.

எது எப்படி என்றாலும் தமிழ் மக்கள் எம்மை நம்பி ஆதரவை வழங்கினால் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம்.

அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற அனுபவம் ஆற்றல் என்பவற்றில் நம்பிக்கை வைத்து தான் நாம் ஒரு முடிவை எடுத்து அதனை மக்களிடத்தே முன்வைத்திருக்கின்றோம்.

அதில் அரசியல் தீர்வு என்ற விடயத்தை பொறுத்தவரையில் 13 ஆவதை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதை பலப்படுத்தி இறுதி தீர்வை அடைய வேண்டும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

காணாமற்போனோர் விவகாரம் தீர்த்து வைக்கப்பட வேண்டும், வீடு மற்றும் காணி இல்லாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை நாங்கள் முன்வைத்தள்ளோம்.

இதற்கமைய எங்கள் ஆதரவு ஆட்சி வந்தால் இனப்பிரச்சனைக்கான தீர்வும் வேலை வாய்ப்பையும் உடனே வழங்குவோம்.

ஏனெனில் நாங்கள் யாரை நம்புகின்றோம் என்பதற்கப்பால் நாங்கள் எங்களை நம்புகின்றோம்.

நாங்கள் சொல்வதையே கடந்த காலங்களில் செய்து வந்தோம். அதே போலவே இப்ப சொல்வதையும் ஆட்சிக்கு வரும் போது செய்து காட்டுவோம். இப்ப இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போல ஆதரவை வழங்கிவிட்டு அரசாங்கம் ஏமாற்றி விட்டது, அவர் ஏமாற்றி விட்டார் , இவர் ஏமாற்றி விட்டார், இந்தியா ஏமாற்றி விட்டது.

சர்வதேசம் ஏமாற்றி விட்டது என்றெல்லாம் கூறமாட்டோம்.

ஆரசியல் தீர்வைப் பொறுத்தவரையிலும் சரி தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பொறுத்தவரையிலும் சரி எதுவானாலும் நடைமுறைச்சாத்தியமானதையே நாங்கள் சொல்லி வருகின்றோம்.

குறிப்பாக அரசயில் தீர்வைப் பொறுது;தவரையில் 13 ஆவதும் அதற்கு அப்பால் என்றதையும் நாங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு யாரும் தடையாக இருக்கமாட்டார்கள். அது யாப்பிலும் இருக்கிறது.

அதற்கு தெற்கிலும் ஆதரவு வழங்குவார்கள். அதே நேரம் இந்தியாவும் ஆதரவை வழங்கும்.

இவ்வாறு நாங்கள் நடைமுறைச் சாத்தியமானதை நாங்கள் முன்வைக்கிறோம்.

அதற்காகச் செயற்படுகிறொம். ஆவ்வாறு நாங்கள் முன்வைத்தததை நாங்களே பெற்றுக் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு தான்.

இதே போல சரி பிழைகளுக்கு அப்பால் பிரபாகரனிடமும் ஒரு கொள்கை இருந்தது. அதனை அடைவதற்கான வேலைத் திட்டமும் இருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கின்ற கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகளிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அடைவதற்கான வழிமுறைகள் என்ன இருக்கிறது. அதற்காக என்ன வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

உண்மையில் அவர்களிடத்தே கொள்ளையும் இல்லை. வேலைத் திட்டமும் இல்லை. ஆகையினால் தமிழ் மக்களின் பிரச்சனைகளத் தீர்ப்பதற்கான கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகள் சொல்கின்ற இந்தக் கொள்கை மற்றும் வேலைத்திட்டங்கள் ; தொடர்பில் ஊடகங்களிடம் மட்மே நாம் கதைப்பதை விடுத்து பொது மேடையில் சவாலுக்கு உட்படுத்த வேண்டும்.

அவ்வாறு சவாலுக்கு உட்படுத்தவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

மேலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அனுகுமுறை இவர்களிடத்தே இல்லை. ஆனால் இந்தப் பிரச்சனைகளைத் தீரப்பிரச்சனைகளாக வைத்திருப்பது தான் கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகளின் நோக்கமாக இருக்கின்றது.

ஆகவே இவ்வாறான போலி அரசயில்வாதிகளை மக்கள் விளங்கிக் கொண்டு எங்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறு மக்கள் எங்களுக்கு ஆதரழவ வழங்கினால் நாங்கள் விரைவாக பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம்.

;உண்மையில் மக்கள் யாரையும் நம்புங்கள் என்று நாம் கேட்கவில்லை. எங்களை நம்புங்கள் என்று தான் நம் மக்களிடத்தே கேட்கின்றோம். அவ்வாறு எங்களை நம்பி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் நிச்சயமாக நாம் மக்களுடைய பிரச்சனைகளதை; தீர்த்து வைப்போம்.

குறிப்பாக கொத்தாவின் ஆட்சி மலர்ந்தால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர:வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உடனடியாக அதுவும் ஆறு மாதகாலத்திற்குள்ளேயே; தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

ஏனெனில் நாம் மக்கள் நலன் சார்ந்தே செயற்படுவொம். ஆதற்காக உழைப்போம்.

இதனையே கடந்த காலங்களில் நாம் செய்தும் வந்திருக்கின்றோம். ஆனால் கடந்த ஆட்சி மாற்றத்தினால் கூட்டமைப்பினர் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடக்கவில்லை.

அவர்கள் மக்களை ஏமாற்றி தமது சுய நலன்களையே பெற்றுள்ளனர். குறிப்பாக தமக்கான பணப்பெட்டிகளையே ஆட்சியாளர்களிடமிருந்து கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்.

ஆனால் நாங்கள் மக்களுக்கான நலன்களை முன்னிறுத்திய மக்கள் நலன் பெட்டிகளையே பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

அதே போலவே ஆதிகாரம் எம்மிடம் வந்து நாம் ஆட்சியில் இருந்தால் மக்கள் நலன்சார்ந்த எமது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம். மேலும் இன்றைக்கு ஆட்சியாளர்களை தனித் தனியாக மிக இரகசியமாக கூட்டமைப்பினர் சந்தித்து வருகின்றனர்.

இதனை அவர்களே பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் அவ்வாறு தனியாக இரகசியமாக எதனையும் செய்யவில்லை. எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தியே வந்திருக்கின்றோம்.

இவ்வாறான நிலையில் தற்போது தேர்தல்கள் வரவிருப்பதால் சர்வதேச சமூகம் பார்க்கிறது.

கேட்கிறது என்று சொல்லி மக்கள் ஆதரவைப் பெற முயல்கின்றனர். ஏனெனில் சர்வதேச சமூகத்தைச் சொல்லித் தான் அவர்கள் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றனர்.

இனியும் பெறுவதற்கு முனைகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட போது இந்த சர்வதேச சமூகம் என்ன செய்தது.

எங்கே போனது. ஆகவே அவர்கள் எங்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே செயற்படுபவர்களாக இருக்கையில் அவர்களை வைத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதை கூட்டமைப்பினர் தவிர்க்க வேண்டும் என்றார்.

கருத்து தெரிவிக்க