மேல் மாகாணத்தில் விஷேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கூடுதலாக பதிவாவதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விஷேட வைத்தியர் திருமதி பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுவரை 41,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நோயாளர்கள் மற்றும் சம்பவித்த மரணங்கள் அதிகரித்துள்ளன.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நுளம்புப் பெருக்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அதனால், தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை துப்பரவாக வைத்திருப்பதில் அனைத்துக் குடும்பங்களும் கவனம் செலுத்த வேண்டும்.
பாடசாலைகளிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை அமுற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
[அரச செய்தி திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க