அண்மையில் நாட்டில் இடம்பெற்ற குண்டுதாக்குதலிற்கு பின்னர் இங்கு பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதனை உறுதிப்படுத்தும் நோக்குடன், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியை சேர்ந்த ஜனாதிபதி சாரணர்களான துசாந்தன், சஞ்சீவன் ஆகிய இருவர் பருத்திதுறையில் இருந்து தெய்வேந்திர முனைவரைக்கும் மேற்கொண்டுள்ள நடைபவனி இன்றையதினம் வவுனியாவை வந்தடைந்து.
வவுனியாவை அடைந்த குறித்த இருவரையும் நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், தமிழ்விருட்சம் அமைப்பை சேர்ந்தவர்களான சந்திரகுமார், சபாநாதன் மற்றும் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், ஜனாதிபதி சாரணிய சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றதுடன் அவர்களிற்கான கௌரவத்தினையும் வழங்கியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற குண்டுதாக்குதலிற்கு பின்னர் நாட்டில் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு சமூகம் எண்ணியிருக்குறது.
எனினும் நாம் பாதுகாப்பாகவே இருப்பதனை வெளிப்படுத்தும் நோக்குடனும், இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்குடனும் குறித்த நடைபவனியை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மேற்கொண்டுள்ளோம் என்றனர்.
குறித்த நடைபவனி நேற்று முன்தினம் பருத்திதுறையில் ஆரம்பித்து எதிர்வரும் 4 ஆம் திகதி தெய்வேந்திர முனையில் முடிவுடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[ ஊடகன் நிருபர் ரூபன் ]
கருத்து தெரிவிக்க