பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள ஜி7 மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையிலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காலை நேர விருந்துபசாரத்தின் போது குறித்த இருவரும் சந்தித்துள்ளனர்.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தினை முன்னெடுப்பதற்கான சிறந்த நபர் பொரிஸ் ஜோன்சன் என ட்ரம்ப் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொரிஸ் ஜோன்சன் பிரித்தானிய பிரதமராக பதவியேற்பதற்கு முன்னரே அவரது இணைந்து செயற்பட விரும்புவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க