ஐக்கிய தேசியக் கட்சியுடன் சம்பந்தன் அவர்கள் காதல் கொண்டுள்ள இச் சூழ் நிலையில் தமிழ் மக்களின் இருப்பையும் தமிழ் தேசியத்தின் அடிப்படை வாதத்தையும் தமிழ் தேசியத்தின் எதிர் கால நோக்கையும் இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக்கட்சி ஈடுபட்டு வருகின்ற என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு முறண்பாடுகள் இருக்கின்றது.
பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ நேரடியாக இன அழிப்பில் ஈடுபட்டவர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வேட்பாளராகளாம் என கூறப்படுகின்ற அமைச்சர் சஜீத் பிரேமதாஸ அவர்கள் இனவாத அடிப்படை கோட்பாட்டின் அம்சமாகவே ஐக்கிய தேசியக்கட்சி எப்பொழுதும் மறை முகமாக இவ்விதமான காரியத்தில் ஈடுபடும் என்று எங்களுக்கு கடந்த காலத்தினுடைய வரலாறாக இருக்கின்றது.
எனவே குறித்த இரண்டு வேட்பாளர்களும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு சம்மந்தமாக தெழிவான ஒரு வழி வரை படத்தை இது வரை காண்பிக்க கூடிய போக்கு இல்லை.
ஒருவர் 13 ஆம் சரத்திற்குள் தான் தீர்வு என்றும்,மற்றையவர்கள் வெளிப்படையாக சொல்லாத இவ்விதமான சூழ் நிலை காணப்படுகின்றது.
ஜக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையிலே சஜித் பிரேமதாஸ அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் கூட தந்தையாரை கொலை செய்த தமிழர் தரப்பிடம் இருந்து மகனிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியுமா?என்கின்ற கேள்வி இருக்கின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இதே தவரைத் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்தது.
எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி சந்திரிக்காவையும்,ரணில் விக்கிரம சிங்கவையும் நம்பி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்போம் அல்லது ஆதரிக்கவேண்டும் என்கின்ற சம்மந்தனின் கூற்றும் எதிர் பார்ப்பும் அவருடைய முதிர்ச்சி அற்ற அரசியல் போக்கை வெளிக்காட்டுகின்றது.
ஆகவே இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் ஆதரிக்கக் கூடிய சூழ்நிலை இருக்குமா?என்கின்ற கேள்வி எழுகின்றது.
இவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை முன் வைக்கப் போகின்றார்கள்?சிங்கள மக்களுக்கு மத்தியில் அதனை எழுத்து மூலமாகவும் உறுதி பூர்வமாகவும் தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலதே தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்கின்ற தீர்மானத்திற்கு வருவார்கள். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க