சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான அரசியல் விவகார முதன்மைச் செயலர் சிடோனியா கப்ரியல் மற்றும் அவரது இணைப்பாளர் துஸ்யந்தி அவர்களுக்கும் – யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கடந்த (20) மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இறுதியாக பதவிவகித்த முதன்மைச் செயலர் மாற்றாலாகிச் சென்ற பின்னர் புதிதாக பொறுப்பேற்ற முதன்மைச் செயலர் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக முதல்வர் அவர்களை சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன, அதாவது நாட்டிலே நடந்த மாற்றங்கள் என்ன? இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்று வினவினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் காணாமல் போனோர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர்களுடைய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது.
800 நாட்களுக்கும் மேலாக அவர்களுடைய போராட்டம் வீதிகளிலே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. எனவே அவர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
போரால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் நிரந்தரமான நிவாரணங்களும், எவ்விதமான முன்னேற்றங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
அவர்களினுடைய பிள்ளைகளினுடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குரியதாக இருக்கின்றது என்ற விடயங்களை தெளிவுபடுத்தினார்.
மேலும் நிலவிடுவிப்பு தொடர்பாக செயலர் வினவியிருந்தார்.
அதற்கு முதல்வர் அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அறவே நிலங்கள் விடுவிக்கப்படவில்லை என்று கூற முடியாது.
கனிசமான நிலங்களை விடுவித்திருக்கின்றார்கள்.
அதிலும் குறிப்பாக இன்னும் விடாமல் இருக்கின்ற தனியார் காணிகளை இதுவரை விடாமல் இருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.
ஏன் என்றால் நாட்டினுடைய ஜனாதிபதி கடந்த 2018 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முதல் அனைத்து தனியார்களுடைய காணிகளும் மீள அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற ஒழு எழுத்து மூலமான அறிக்கையை எங்களுடைய தலமைகளுக்கு வழங்கியிருந்தார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டமையை யாவரும் அறிவீர்கள்.
இது மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.
மேலும் நிலைபேறு அபிவிருத்தி என்ற ரீதியில் பல்வேறு திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்த போதிலும் நாட்டில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் குழப்பங்கள் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக அமைந்தது.
அதன் பின்னர் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களும் மாணவர்கள் உட்பட இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் கேள்விக்குறியாக்கிய ஒரு சம்வமாக ஓரு அச்ச உணர்வை ஏற்படுத்திய சம்வமாக ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு எல்லோருடைய மனங்களிலும் ஒரு பயங்கரமான உணர்வை ஏற்படுத்தியிருந்ததையும் குறிப்பிட்டார்.
தற்பொழுது உள்ள கள நிலைமை மற்றும் நல்லூர் உற்சவகால நிலைமைகள் – பாதுகாப்பு தொடர்பில் செயலர் வினவியதற்கு பாடசாலைகள் சுமூகமாக இயங்கி வருகின்றது.
மாணவர்கள் வழமை போன்று தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர்கின்றார்கள்.
மேலும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோட்சவம் சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மக்கள் அச்சப்படுகின்றனரா? என்று வினவியதற்கு, அவ்வாறு மக்கள் கூறவில்லை. மக்கள் பாதுகாப்பாக வந்து பக்திச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்ற உணர்வு காரணமாக சுமூகமாக மஹோட்சவ நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் தலையீடு செய்வதில்லை.
அடுத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு தொடர்பில் வினவியதற்கு, இரு கட்சிகள் தனது வேட்பாளரை அறிவித்திருக்கின்றது.
அரச தலைவர்கள் மாற்றம் வழமையாக இடம்பெறுகின்றது. நாம் பல அரச தலைவர்களை சந்தித்திருக்கின்றோம். அது முக்கியமல்ல.
அதிலிருந்து பல பாடங்கள் உள்ளன. அவற்றை கொண்டு மக்கள் விரும்பும் வேட்பாளரை ஆராய்ந்து, தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வை அடையும் வண்ணம் கட்சி தலைமைப்பீடம் ஆதரவை வழங்கும்.
அது தொடர்பில் அவசரமாக எதுவும் கூற முடியாது என்ற கருத்தை முதல்வர் பதிவு செய்தார்.
இறுதியாக யாழ் மாநகர எல்லைக்குற்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், திண்மக்கழிவகற்றல் திட்டம், முறையான பாதாள சாக்கடைத்திட்டம் இன்மையால் தற்பொழுது யுகுனு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பிலும் விளக்கினார் முதல்வர்.
முதல்வரின் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் முன்னர் உள்ள செயலர் வழங்கிய ஒத்துழைப்புக்களைப் போன்று தமது ஒத்துழைப்புக்களையும் தொடர்ந்தும் வழங்க தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க