கொழும்பு மாநகரை தெற்காசியாவில் அழகிய மாநரகமாக மாற்றியமைப்பது சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட வீதிகளின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யூனியன்பிளேஸ் பகுதியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கும் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்த பிரதமர் கொழும்பு நகரம் இந்து சமுத்திரத்தின் மிகப்பெரிய நகரமாக மாற்றியமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான வேலைத்திட்டம் பெரு நகரங்கள் என்ற எண்ணக்கருவின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், முதல் மாதத்தில் பயணிகளுக்கு இலவசமாக பயணிப்பதற்கான வாய்ப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க