களுகங்கையின் நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலக்கடலை அறுவடை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொரகஹகந்த நீர்த்திட்டத்துடன் நிர்மாணிக்கப்பட்ட களுகங்கை நீர்த்திட்டத்தின் முதலாவது நீர் விநியோகத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பயிர் அறுவடை லக்கல பிரதேசத்தில் தற்பொழுது அறுவடை இடம்பெறுகின்றது.
இம்முறை லக்கல பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கடலை உற்பத்தியின் மூலம் வெற்றிகரமான அறுவடை கிடைத்துவருகின்றது.
ஒரு கிலோ நிலக்கடலைக்கு 210.00 ரூபா உயர்வான விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த பிரதேசத்தில் வருடத்தில் ஒரு போகத்திற்கான உற்பத்தி நடவடிக்கைகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட விவாசாய நிலங்களில் தற்பொழுது இரண்டு போகங்களுக்கான உற்ப்பத்தி மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க