இலங்கையின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூதுவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
இதன்போது அமெரிக்க தூதுவர் இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் வெளியிட்ட கருத்தை கண்டித்து ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு முன்வைக்க வேண்டும் என விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன்வசப்படுத்த சீன தூதுவர் எவ்வாறு எம் மீது அழுத்தம் பிரயோகித்து, எமது நாட்டை அடிபணிய வைத்தாரோ, அதே பாணியில் அமெரிக்காவும் எம்மை அடிபணிய வைக்க நினைக்கின்றது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க