உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சிறைச்சாலை பொறுப்பதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

இனந்தெரியாத நபர்களினால் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களுக்கு உதவி வழங்கிய உந்துருளியின் ஓட்டுனர் அம்பலாங்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பகுதியில் வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க