தமிழ் மக்களின் இரத்தம் குடித்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடை வாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து, தமிழ் மக்களின் வாக்குகளினால் நாட்டின் ஜனாதிபதியான, மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, இந்த நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவேன் .
மீண்டும் அதிபராக ஆசைப்படமாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த,பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த, இன்னும் கொல்லுவேன் என்று இறுமாப்புடன் சொல்கின்ற வரை, இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதன் மூலம், நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது .
தமிழ் மக்களின் இரத்தம் குடித்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடை வாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் அபாயகரமானது” என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க