சினிமா

60வது படத்திற்கு தயாராகும் அஜித்!

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை வெற்றிபெற்றதை அடுத்து தன்னுடைய 60வது படத்திற்காக மீண்டும் அதே குழுவுடன் இணைகிறார் தல அஜித்.

ரேஸ் தொடர்பான கதையில் உருவாவதாலும், அஜித் நிஜ பைக் ரேஸர் என்பதாலும், அவர் பல சாகசங்களை செய்யும் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறப் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்கிறார் அஜித். அதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித், இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.மேலும், ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க