உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கன்னியா சிங்களவர்களுக்கு உரியது. தமிழர்களுக்கு இடமில்லை

கன்னியா பிரதேசம் சிங்கள மக்களுக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கும் உரியது.

இதனை சம்பந்தன் சுமந்திரன் போன்ற இனவாதிகள் முறையற்ற விதத்தில் ஆக்கிரமிப்பு செய்வதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை.

இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு முதலாவதாக பிரச்சனை கொடுக்க கூடியவர்கள் முஸ்லீம் மக்கள்.

அடுத்தாக தமிழ் மக்களே உள்ளதாக சிங்கள லே பொதுச்செயலாளர் மெடிலே பங்சலோக தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள லே அமைப்பினர் திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிரதேசத்தில் இருக்கும் சேதப்படுத்தப்பட்ட பிள்ளையார் கோயில் மற்றும் தொல்பொருள் தினைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசத்திற்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்

இதன்போது கருத்துரைத்த மெடிலே பங்சலோக தேரர் இப்பிரதேசத்தை ஆராய்ந்து பார்க்கும் போது பௌத்த மதத்துக்குறிய எச்சங்களே காணப்படுகின்றன.

கன்னியா தொல்பொருள் தினைக்களத்திற்கு உரிய பிரதேசத்தில் கட்டிட நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதே தொல்பொருள் சட்டம்.

ஆனால் தமிழர்கள் அந்த சட்டத்தை மீறுபவர்களாக் தமது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
மறுபுறம் குருகந்த விகாரைக்கும் இவர்கள் கைவைத்துள்ளனர்.

தொல்பொருள் பிரதேசத்திற்கு சொந்தமான பிரதேசம் என்று கூறிகிறார்கள்.
இப்படியே வடகிழக்கில் தொல்பொருள் பிரதேசம் ஒருபக்கம் முஸ்லிம் இனவாதிகள் தங்களுடையதென்று வாதிடுகின்றனர்.

இன்னொரு பக்கம் தமிழ் இனவாதிகள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உட்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு நாங்கள் கூறிக்கொள்ள விரும்புவது தயவுசெய்து தமிழ் பௌத்த மக்களிடையே உள்ள உறவை குழப்பாமல் பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் அவர்கள் தமது நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

கோயில் அம்மாவோ அல்லது வேறு எவரோ எல்லோரும தொல்பொருள் பிரதேசத்தை விட்டு தயவு செய்து வெளியேறிவிடுங்கள் என்றும் மெடிலே பங்சலோக தேரர் கோரிக்கை விடுத்தார்.

கருத்து தெரிவிக்க