உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெளிநாடுகளின் எதிர்ப்புகளை இலங்கை நிராகரிப்பு!

இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான விடயத்தில், வெளிநாட்டுத் தரப்பினர் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா உடனடியாகவே எதிர்ப்பை வெளியிட்டது. அதையடுத்து, பல்வேறு நாடுகளும், ஐ.நாவும் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன.

இந்தநிலையில்,வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

”இராணுவத் தளபதியின் நியமனம்,ஜனாதிபதியின் இறையாண்மைக்கு உட்பட்ட தீர்மானமாகும்.

நாட்டின் பொதுச்சேவை, பதவியுயர்வு தொடர்பான தீர்மானங்கள் மற்றும் உள்நாட்டு நிர்வாக செயன்முறைகளைப் பாதிக்கும் வகையில், வெளிநாட்டு தரப்பினரின் முயற்சிகள், தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது நியமனம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துக் கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கிறது.

இது அனைத்துலக சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும், இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க