- உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றினால் மனதிலுள்ள கெட்ட நோய் அகன்று வெளியுலகில் நல்ல தொடர்பு கிடைக்கும்.
- உங்களிடம் சிலர் நல்ல முறையில் பேசலாம். ஆனால் மனதிற்குள் கள்ளம் இருக்கும். இப்படிப்பட்ட பேச்சைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒழுக்கமாக இவ்வுலகில் யார் நடக்கிறார்கள் என கருதுகிறீர்களோ அவர்களுடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். பேச்சுக்கும் நடத்தைக்கும் சம்பந்தம் இல்லாதவர்களுடன் உறவு கொள்வது பிழையாகும்.
- பாசி மூடியிருக்கும் நீர்நிலையின்மீது கல்லை எறிந்தால் பாசி கலைந்து நல்லநீர் கண்ணுக்குப் புலப்படும். அதுபோல நல்லவர்கள் சொல்லும் சொற்களின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிந்தால் அறிவு தெளிவடையும்.
கருத்து தெரிவிக்க