உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஏன்றபிரையஸ் ஸ்ரீலங்கா திட்டம் ; கிழக்கு மாகாணத்தில் புதிய அலுவலகம் திறப்பு!

நிதியமைச்சினால் ஏன்றபிரையஸ் ஸ்ரீலங்கா திட்டத்தினை சிறப்பாக முன்னெடுப்பதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாணத்துக்கான புதிய அலுவலக திறப்பு விழா.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிழக்கு மாகாணத்துக்கான அலுவலகத் திறப்பு விழா திங்கட்கிழமை (19) வங்கியின் தலைவர்; சட்டத்தரணி சுஜித் பிரசன்ன காரியவசத்தின் பிரதம பங்கு பற்றலுடன் மட்டக்களப்பில் நடைபெற்றது.

வங்கியின் பொது முகாமையாளரும் பிரதான (பதில்) நிறைவேற்று அதிகாரியுமான தெ.குகன் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கு மாகாண அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், மட்டக்களப்பு இரண்டாவது கிளை வளாகம் ஆகியவற்றை ஓருங்கே அணைத்ததாக அமைந்துள்ள இவ் அலுவலகத்தின் திறப்புவிழா நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளின் முகாமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இவ் நிகழ்வில் வங்கிப்பணிகள் அதிதிகளால ஆரம்பித்து வைக்கப்பட்டன.

2011ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய 7 கிளைகளைக் கொண்டு கடந்த 8 வருடங்களாக பணியாற்றுக்கிறது.

பிரதேச அபிவிருத்தி வங்கியானது இலங்கையில் 3ஆவது பெரிய வலையமைப்பைக் கொண்டதும் அரசாங்கத்தின் ஒரேயொரு அபிவிருத்தி வங்கியாகவும் இருந்து செயற்படுகிறது.

கருத்து தெரிவிக்க