முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அம்பலவன் பொக்கணைப்பகுதியில் வீடு ஒன்றினை கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும் போது ரி.56 துப்பாக்கியின் அடிப்பக்கம் தெரிந்துள்ளதை தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த [17.08.19] அன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த வீட்டில் புதைந்து காணப்படும் வெடிபொருட்களை அகற்றுவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் [18.08.19] அன்று சிறப்பு அதிரடிப்படையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது
இதற்கமைய குறித்த வீட்டின் அத்திவாரம் வெட்டப்பட்ட பகுதியினை [18.08.19] அன்று முல்லைத்தீவு மாவட்ட சிறப்பு அதிரடிப்படையினர் தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
இதன்போது துருப்பிடித்த நிலையிலான ரி.56 துப்பாக்கியும் அதற்கான நான்கு ரவைக்கூடுகளில் ரவை நிரப்பப்பட்ட நிலையில் ஆகாஸ் கைக்குண்டு,தமிழன்குண்டு ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுகள் அனைத்தும் தகர்த்து அழிக்கும் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
கருத்து தெரிவிக்க