வெளிநாட்டு செய்திகள்

ஹொங்கொங் விவகாரம்: சீனாவை எச்சரிக்கும் ட்ரம்ப்

ஹொங்கொங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா- சீன இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் கைதிகள் பரிமாற்ற பிரேரணை முழுமையாக ரத்து செய்ய கோரி இடம்பெற்று வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

“சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹொங்கொங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் என நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.

ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, விசாரணையை மேற்கொள்ளும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை எதிர்த்து ஹொங்கொங் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க