உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கட்டண அதிகரிப்பு இன்றி தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் – அமைச்சு

கட்டணத்தை அதிகரிக்காது, தொடர்ந்தும் மின் விநியோகத்தை மேற்கொள்வதே அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,

மொத்த சனத்தொகையில் பெரும் தொகையினருக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

கேள்வியில் 30 சதவீதம் நீர்மின் உற்பத்தி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அனல் மின் நிலைய உற்பத்தி மற்றும் மாற்று எரிசக்தி முறையும் பயன்படுத்தப்படுகிறது.

மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

நீர்மூலமான மின் உற்பத்தி இலாபகரமானதுடன், சூழலுக்கு பொருத்தமானதாகும்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு 300 மெகாவோட் மின்சக்திக்கு மேலதிகமாக மின் பிறப்பாக்கி ஒன்றை பொருத்துவதற்கும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் போது, துரிதமாக சீர் செய்வதற்கு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க