ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் மேல் மாடியில் உள்ள ஜனாதிபதியின் அறைக்குச் சென்ற சில அமைச்சர்கள், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.
அதன்போது அமைச்சர்களில் ஒருவர், “ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கப் போகிறீர்களா?” என கேட்டார்.
நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன். நான் அத்தகைய முடிவை எடுக்கவில்லை.” என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க