வெளிநாட்டு செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிடக்கூடாது! ரஷ்யா

காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிடக்கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை அதன் நட்பு நாடான சீனா ஆதரித்து. பாகிஸ்தானின் கோரிக்கைப்படி, ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு அதன் தலைவரை சீனா கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர ஆலோசகராக இருக்கும் பிரிட்டன், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகளின் பிரநிதிகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
எனினும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் ஐநா பாதுகாப்பு சபை தலையிடக்கூடாது என நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்து தெரிவிக்க