மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சஹாயபுரம் மீள்குடியேற்ற கிராம மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த கால யுத்தத்தின்போது 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற இவர்கள் மட்டக்களப்பில் உள்ள நலன்புரி முகாம்களில் இருந்து பின்னர் 2008 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது இக் கிராமத்தில் 112 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம் மக்கள் வசிப்பதோடு பலர் வீடுகள் இன்றி தற்காழிக குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
அத்தோடு மின்சாரம், மலசலகூடம், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படைவசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இக்கிராமத்தில் பாடசாலையொன்று இல்லாமையில் போக்குவரத்து வசதியில்லா இங்குள்ள 50 க்கும் அதிகமான மாணவர்கள் பல கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள இருதயபுரம் வித்தியாலயத்திற்கு செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சஹாயாபுரம் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க