இந்த நாட்டின் ஆட்சிக்கு கொடூரார்கள் மீண்டும் வருவார்களானால் மீண்டும் படையிரின் கைகள் கட்டவிழ்த்துவிடப்படும் வீதிகளில் படையினர் படையெடுத்து திரிவர் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவர்களின் 13 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் நேற்று நடைபெற்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொலை உங்களது கொள்கை, அந்த கொள்கைகளுடன் அலைந்தீர்கள் அந்த கொள்கைகளை வைத்துக்கொண்டு தமிழின படுகொலையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தீர்கள் அதன் ஒரு அடையாளம் தான் செஞ்சோலை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
இந்த தாக்குதல் விடுதலைப்புலிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக எண்ணிக்கொண்டார்கள்.
அன்றைய காலகட்டத்தில் 400 வரையான மாணவர்கள் பயிற்சிக்காக சென்றார்கள் அதிகமான மாணவர்களை ஒன்றாக்கக் கூடிய இடமாக செஞ்சோலை வளாகம் இருந்தது.
எனவே அதனை கல்வித்திணைக்களங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் விடுதலைப்புலிகளால் அந்த வளாகம் கடனாக வழங்கப்பட்டது
அன்று மிலேச்சத்தனமாக இந்த விமானத்தாக்குதலை ஒரு பாரிய இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்வார்களா? பாரிய தவறுகள் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வருகின்றது என்பதுதான் உண்மை.
இன்று தேர்தலில் குதிப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு நிப்பவர்கள் இனப்படுகொலையினை கனகச்சிதமாக முடித்துக்கொண்டவர்கள்.
போர்க்குற்றங்களை சர்வசாதாரணமாக நிறைவேற்றிக்கொண்டவர்கள் இவர்களை காப்பாற்றி வைத்துக்கொண்டிருப்பவர்கள் மீண்டும் எதிர் அணியினராக போட்டிபோட்போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே மக்களே நீங்களாகவே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள் இந்த கொடூரார்கள் மீண்டும் வருவார்களானால் படையிரின் கைகள் கட்டவிழ்த்துவிடப்படும் இளைஞர்கள் மீது அராஜகம் நிறைவேறும்,ஊடகவியலாளர்கள் காணமல் ஆக்கப்படுவார்கள், என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க