உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நிலாவெளி வீதியில் விபத்து; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி! PHOTOS

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை நிலாவெளி வீதியில் துவரங்காட்டுச் சந்தியில் நேற்று இரவு 7.30 மணியவில் விபத்தொன்று  இடம்பெற்றது.

குறித்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 7 பேரில் 6 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் தள வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்ட்டிருப்பதாக உப்புவெளி பொலிஸார்
தெரிவித்தனர்.

இடம்பெற்ற விபத்தில், விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாகவும் சாரதியும் கந்தளாய் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில், சாலையில் பிரயாணித்த முச்சக்கரவண்டியில் இருந்த நான்கு பேர் உட்பட நடைபாதை வியாபாரம் செய்துகொண்டிந்த வயோதிப பெண்ணும் வீதியில் நின்றுகொண்டிருந்த நபர் உட்பட ஆறுநபர்கள் காயத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவத்தின் பின் கார் சாரதியை பொலிஸார் அழைத்துச்சென்றதையடுத்து கோபம் கொண்ட அப்பிரதேச வாசிகள் விபத்து ஏற்படுத்திய வாகணத்தை வீதியோரத்தில் வைத்து தீவைத்துக்கொளுத்தினர்.

வாகனத்தை தீவைத்துக்கொளுத்தியமை,வீதியைமறித்து குழப்பம் விளைவித்தமை ,பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தமை என்கின்ற குற்றஞ்சாட்டின் அடிப்படையில் அப்பிரதேசத்தைச்சேர்ந்த 20 சந்தேகநபர்களை தாம் கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்னும் சில சந்தேக நபர்கள் தேடப்படுவதாகவும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க