உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரணிலுக்கு மீண்டும் அதிர்ச்சிவைத்தியம். சஜித்துக்காக மங்கள களத்தில்.

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தெரிவுசெய்யவேண்டும் என்ற அழுத்தம் தொடர்கிறது.

இதன் அடுத்தக்கட்டமாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாத்தறையில் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசியாக இருந்த அமைச்சர் மங்கள சமரவீர இதனை ஒழுங்கு செய்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி சஜித் பிரேமதாஸக்கு வரவேற்பு வழங்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக்காதுபோனால் அவரை வேறு ஒரு கட்சியின் மூலம் ஜனாதிபதி வேட்பாளராக்கப்போவதாக மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி எச்சரித்துள்ளார்

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க