ஜே.வி.பி. தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்கவே களமிறங்கவுள்ளார்.
இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ‘மக்கள் சக்தி’ என்ற கூட்டணியை ஜே.வி.பி. உருவாக்கியுள்ளது. 16 இற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன.
இக்கூட்டணியின் அறிமுகமும், மக்கள் கூட்டமும் எதிர்வரும் 18 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க பெயரிடப்படவுள்ளார்.
கருத்து தெரிவிக்க