அழகு / ஆரோக்கியம்

சாப்பிட்ட பின் செய்யக் கூடாத சில விடயங்கள் !

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யக் கூடாத விடயங்களிலும் கவனம் எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யக் கூடாத விடயங்கள் பற்றி பார்ப்போம்.

சாப்பிட்ட உடன் சிகரெட் பிடிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதை விட பல மடங்கு கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்ட பின் பழங்கள் உண்பது பொதுவான பழக்கம். அவ்வாறு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிட்டால் வயிற்றுக்குள் காற்று உட்புகுந்து வயிறு ஊதி விடும். எனவே உணவு உண்பதற்கு ஒரு மணித்தியாலம் முன்னர் பழங்கள் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்ட பின் இரண்டு மணித்தியாலங்கள் கழித்து சாப்பிடலாம்.

சாப்பிட்ட பின் தேநீர் அருந்தக் கூடாது. தேயிலையில் உள்ள அமிலத் தன்மை உணவில் இருக்கும் புரதத்தை கடினப்படுத்தி, உணவு செமிபாடு அடைவதை கடினப் படுத்தும்.

சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அதுவும் உணவு செமிபாடு அடைவதை தடுத்து வயிற்றுப் பிரட்டலை உண்டாக்கும்.

சாப்பிட்ட உடன் நித்திரை கொள்வதும் கூடாது. சிறிது  நேரம் கழித்து உறங்கச் செல்லலாம். அப்போது  தான் உணவு சரியான முறையில் செமிபாடு அடையும்.

சாப்பிட்ட பின் குளித்தால் உடல் , கை, கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, செமிபாட்டுக்கு செல்ல வேண்டிய இரத்தம் குறைந்து செமிபாட்டு உறுப்புகள் பாதிப்பு அடையும்.

சாப்பிட்ட பின் நடப்பதும் நல்லது அல்ல. உணவின் சத்துகள் சரியான முறையில் செமிபாட்டு உறுப்புகளை சென்று அடைவதை நடை தடுத்து விடும். இதனாலும் உறுப்புகள் பாதிப்பு அடையும். எனவே இவ்வாறான விடயங்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

கருத்து தெரிவிக்க