பிளாஷ்டிக் பாவனையைத் தவிர்க்குமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அந்தணர் ஒன்றியச் செயலாளர் தெரிவிக்கும் போது எமது பிரதேசங்களில் தற்போது ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பித்துள்ளது.
இதனால் தூரதேசங்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் உள்ளூர் வாசிகள் என பலரும் ஆலயத்திற்குச் சென்றுவருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் கூடைகளைப் பெற்று அர்ச்சனை செய்வது வழமை.
ஆனால் தற்போது தென்னிலங்கை மற்றும் பல பாகங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தந்து இவ்விழாக்காலங்களில் தங்கள் பிளாஷ்டிக் பொருட்களை விற்றுக் கொள்கின்றனர்.
அதனாலே அதிகமான பிளாஷ்டிக் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதனால் அவற்றின் பாவனைகள் அதிகரிப்பதோடு தோல் நோய்கள் வர வாய்ப்புள்ளது.
எனவே பனை ஓலையால் பின்னப்பட்ட அர்ச்சனைக் கூடைகளை தயாரிப்பதால் மூலம் பிளாஸ்டிக் பாவனையை குறைக்க முடியும் .அத்தோடு இதனை விற்பதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க செய்ய முடியும்.
எனவே வெளியில் இருந்து வியாபாரிகளையோ அல்லது பிளாஷ்டிக் பொருட்களையோ ஆலயச் சூழலில் அனுமதியாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க