முல்லைத்தீவில் வைத்து வவுனியாவினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டிலி வசிக்கும் நபர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை தேடிவருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
வவுனியாவினை சேர்ந்த 42 அகவையுடைய ச.நாகேந்திரன் என்ற குடும்பஸ்தார் முல்லைத்தீவில் வைத்து பணம்பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் முல்லைத்தீவு பொலீசில் முறைப்பாடு பதியப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜ.பி.கங்காநாத் தலைமையிலான காவ்பல்துறை உத்தியோகத்தர்களான உள்ளிட்ட குழுவினர் விசாரணை நடத்தி தேடுதல் மேற்கொண்டு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளார்கள்.
கடந்த 01.08.19 அன்று வவுனியாவினை சேர்ந்த குறித்த குடும்பஸ்தரை கடத்தி அவரது மனைவிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
பிரான்சில் வசித்துவரும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியினை சேர்ந்த எழுபேர் கொண்ட குழு இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைதுசெய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது அவர்களை கடந்த 20.08.19 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்துள்ளார்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்துள்ளார்கள்.
கருத்து தெரிவிக்க