” வடக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு எமது ஆட்சியில் தீர்வு முன்வைக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இலங்கையின் இறையான்மையில் கை வைக்க எவருக்கும் இடமளிக்கமாட்டேன். அதேபோல் அடிப்படைவாதம், பயங்கரவாதம் ஆகிய பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
அரசாங்க ஊழியர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பயிற்சி வழங்கப்பட்டு அரசாங்க சேவை நவீன யுகத்துக்கேற்ப கட்டியெழுப்படும்.
விவசாயம், கைத்தொழில் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளுக்கும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். என்றும் கோட்டா கூறினார்.
கருத்து தெரிவிக்க