பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க வவுனியாவிற்கு இன்றையதினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தென்னை பயிர்ச்செய்கை சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தென்னை அபிவிருத்தி திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு விவசாயிகளிற்கு மானியங்களை வழங்கிவைப்பதற்காகவே அமைச்சர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வவுனியா மற்றும் மன்னாரில் தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளும் 600 பயனாளிகளிற்கான உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அவற்றில் 300 பேர்களிற்கு 30 இலட்சம் பெறுமதியான காசோலைகளும், 300 பேருக்கு தென்னை பயிர்உட்பட உள்ளீடுகளும் வழங்கிவைக்கபட்டது.
தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் பெ.உதயசந்திரன் தலைமையில் வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் எ.ரந்யித், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார்,தென்னை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க