இளைஞர் யுவதிகள் எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முன்வரவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி அலுவலக திறப்பு விழாவி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் இருக்கு வேலை இல்லாத பிரச்சனை உள்ளது.
2015 ஆண்டு என்பது எங்களுக்கு கிடைத்த ஒரு பொற்காலம். இந்த 4 வருடகாலம் மக்களினுடைய அரசியல் உரிமைக்காக, இளைஞர் யுவதிகளுடைய வேலைவாய்ப்புக்காக தமிழ் தலைமைகள் நடந்து கொண்ட விதம் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மீண்டும் உரிமைகளை வென்று எடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இன்னும் 4 மாத காலத்திலே ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழர்களுடைய கையிலே தான் இருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பது சவாலாகும்.
பல்வேறு பட்ட கூறுகளாக இருக்கக்கூடிய நாங்கள் குறைந்த பட்சம் கடந்த அறுபது எழுபது வருட காலமாக இந்த நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த அட்டூழியங்களில் இருந்து மீண்டெழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் ஒரு சரியான காத்திரமான முடிவெடுக்க வேண்டும்.
இன்றைக்கு நாங்கள் ஒரு மாற்று தலைமை நோக்கி செல்ல வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
ஆகவே தமிழ் மக்களுக்கு ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை ஒன்று தேவை. தமிழ் மக்களினுடைய அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கு இது தான் எங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு இறுதி சந்தர்ப்பம்.
ஆகவே இளைஞர் யுவதிகள் எமது அரசியல் உரிமை மற்றும் பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க