உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2004 மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு’

மஸ்கெலியா- லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2004 G.C.E O/L மாணவ நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இன்றைய தினம் லக்கம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலைக்கு தண்ணீர் Filter, வறிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் என்பனவற்றை 2004 மாணவர்கள் வழங்கினர்.

இதனை தொடர்ந்து கல்வியறிவு தந்த ஆசிரிய பெருந்தகைகளுக்கு பரிசில்களை வழங்கி மகிழ்வித்தனர்.இவ்வாறான செயல் திட்டங்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

தொடர்ந்து அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள் தங்களது பாடசாலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மாணவர் நண்பர்களுக்கிடையில் சுவராசியமான போட்டி நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர்.

ஸ்டார் டீஜேயின் Karaoke இசையில் பாடல்களை மிகவும் இனிமையாக பாடகர் பாலா பாடி மகிழ்வித்தார்.

ஒர் இனிமையான பொன்னான நாளில் பள்ளியில் துள்ளி திரிந்த இனிமையான அனுபவங்களை சுமந்தவாறு நேற்றைய தினம் அமைந்திருந்தது.

குறித்த பாடசாலை நிர்வாகம் அன்பான நன்றிகள் 2004 O/L மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க