உள்நாட்டு செய்திகள்புதியவை

சந்தா அதிகரிப்பு: சாமிமலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமது ஜூலை மாத சம்பளத்தில் தொழிற்சங்க சந்தா கூடுதலாக அறவிடப்பட்டுள்ளதால் சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்டத்தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் தமது சம்பளத்தில் அறவிட படும் சந்தாவை விட 83/= ரூபாய் அதிகமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்து தோட்ட காரியாலயத்தில் கேட்டுள்ளனர்.

இதன் போது இதுவரை காலமும் 150/= ரூபாவாக அறவிடப்பட்டு வந்த சந்தாவை 83/= ரூபாவால் அதிகரிக்குமாறு சுற்று நிருபம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலையக தொழிற்சங்கஙகள் 1000/=ரூபாய் சம்பளம் வாங்கி தருவதாக கூறி இறுதியில் 20/= ரூபாய் சம்பளத்தையே பெற்று கொடுத்துவிட்டு தம்மை முழுமையாக ஏமாற்றியுள்ளது.

அதே நேரத்தில் வரவு செலவு திட்டத்தின் மூலம் கடந்த மே மாதம் முதல் பெற்று தருவதாக கூறிய 50/= ரூபாவும் தமக்கு இது வரைக்கும் கிடைக்கவில்லை. எமக்கு கிடைக்க வேண்டிய நிலுவை பணமும் கிடைக்கவில்லை என மக்கள் தன் போது கோசம் எழுப்பியுள்ளனர் .

மேலும் தமக்கு தொழிற்ச்சங்கஙகளால் எந்த பயனும் இல்லை என்றும் தற்போது அறவிடப்படும் சந்தா பணத்தையும் முழுமையாக நிறுத்த போவதாகவும் தொழிற்சங்கங்கள் சம்பள விடயத்தில் தம்மை முழுமையாக ஏமாற்றியுள்ளதாகவும் ஸ்டொக்ஹோம் தோட்டத்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க