மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனியார் உறுப்பினரின் பிரேரணைக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 9) தள்ளுபடி செய்தது.
அரசியலமைப்பின் பிரிவு 120 மற்றும் 121 ன் கீழ் குறித்த தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என கூறி சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை எழுப்பியதை அடுத்து இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
குறித்த பிரேரணையை சட்ட ஆவணமாக கருதலாம் என அறிவிக்குமாறு நீதிமன்ற உத்தரவை கோரிய மனுதாரர்களில் பேராசிரியர் கமினா குணரத்ன மற்றும் வழக்கறிஞர் ராதிகா குமாரஸ்வாமி ஆகியோர் அடங்குவர்.
அரசியலமைப்பிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலா லால் பண்டரிகொட சமர்ப்பித்த பிரேரணையை , நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று மனுதாரர்கள் வாதிட்டதாக குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க