புதிய அரசியல் கூட்டணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் பதவியொன்றை வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பச்சைக்கொடி காட்டியுள்ளது.
எனினும், பதவி நிலை மற்றும் அதற்காக பகிரப்படும் அதிகாரங்கள் தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதன்போது இவ்விவகாரம் குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
கம்போடியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
இப்பேச்சு வெற்றியடைந்து கூட்டணி அமையும் பட்சத்தில் மைத்திரிக்கு உயர் பதவியை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
கருத்து தெரிவிக்க