உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நன்னீர் இறால் குஞ்சுகள் நீர் தேக்கத்தில் விடுவிக்கப்பட்டன

மவுசாக்கலை நீர் தேக்கத்தில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் நன்னீர் இறால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன.

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தை வாழ்வாதாரமாக பயன்படுத்தும் மீனவர்களின் நலன் கருதி இவ்வாறு இறால் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன.

தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படும் கஹதமோதர நன்னீர் இறால் வளர்ப்பு மத்திய நிலையத்தின் மூலம் பெறப்பட்ட இறால் குஞ்சுகளே இவ்வாறு நீர்த்தேக்கத்தில் விடுவிக்கப்பட்டன.

இந்த இறால் குஞ்சுகள் ஒரு வருடத்தில் 500 முதல் 750 கிராம் எடை வரை வளரும் என இவ்வதிகார சபையின் நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

நன்னீர் இறால் கிலோ ஒன்று 1500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் மீனவர்களின் பொருளாதாரம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க