பொன்மொழிகள்

அஞ்ஞானி உலகத்தை வெறுக்கிறான்! – ரமணமகரிஷி

  • துறவு என்பது அனுபவிக்கப்பட்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எப்போதும் அது இருந்துகொண்டே இருப்பதுதான். வந்து போவதாகத் தோன்றுவது மனத்தின் இயல்புதான்.
  • காகம் தன் கண்ணின் மூலம் இரண்டு பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தும். யானைக்கு அதன் தும்பிக்கை கையாகவும், மூக்காகவும் இருவிதங்களில் பயன்படுகிறது. இதைப் போல ஞானி என்பவனுக்கு உறக்கம், விழிப்பு, உறக்கத்தில் விழிப்பு நிலை, விழிப்பில் உறக்க நிலை ஆகிய அனைத்தும் ஒன்றுதான். இருப்பினும் ஞானி உலகத்தைக் காண்கிறான். அஞ்ஞானி தான் உலகத்தை வெறுக்கிறான்.

கருத்து தெரிவிக்க