நீதிமன்ற வளாகத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவை அச்சுறுத்தியதற்காக தனியார் ஆசிரியருக்கு எதிராக ஓகஸ்ட் 27 ம்திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பிரேரணைக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ராஜபக்ஷவை அச்சுறுத்தியதற்காக தனியார் ஆசிரியரான ரோஹன் கொண்டகொட கைது செய்யப்பட்டார்.
எனினும் அவர் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதி குழுவால் இரண்டு ரூ .500,000 பிணைகளால் விடுவிக்கப்பட்டார்.
அரசியலமைப்பிற்கு முரணானவை எனக் குறிப்பிட்டு, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் கல்வி வகுப்புகளை தடை செய்வதற்கான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச வின் பிரேரணையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவுக்கு பதிலளித்தவராக மனுதாரர்கள் சட்டமா அதிபரை பெயரிட்டிருந்தனர். எனினும் அமைச்சர் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கருத்து தெரிவிக்க